• Wed. Jul 16th, 2025

24×7 Live News

Apdin News

ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல் | Wrong Thirukkural on shield given to doctors at Governor House ceremony

Byadmin

Jul 16, 2025


சென்னை: மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது.

கேட​யத்​தில் இடம் பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ் ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் சர்ச்​சைக்​குள்​ளான நிலை​யில், 50 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களை திரும்ப பெற்​று, திருக்​குறளை திருத்​தம் செய்து சில தினங்​களில் மீண்​டும் வழங்​கு​மாறு ஆளுநர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக கேட​யம் பெற்ற மருத்​து​வர்​களிடம் கேட்​ட​போது அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மருத்​து​வர்​தான் விழாவை ஏற்​பாடு செய்​தார். மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​படும் கேட​யத்​தில் திருக்​குறளில் மருத்​து​வம் தொடர்​பான அதி​காரத்​தில் இருந்து குறள்​களை அச்​சிடு​மாறு ஒரு​வரிடம் தெரி​வித்​துள்​ளார். அந்த நபர் ‘சாட் ஜிபிடி’ மூலம் குறளை தேடி அச்​சிட்​டுள்​ளார்.

அதனால்​தான் திருக்​குறள் தவறாக இடம் பெற்​றுள்​ளது. இது விழா ஏற்​பாடு செய்த மருத்​து​வ​ரால் நடந்த தவறு. விழாவை ஏற்​பாடு செய்த மருத்​து​வர், தவறு நடந்​ததற்கு மன்​னிப்பு கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளார். மேலும், கேட​யத்தில் சரி​யான திருக்​குறள்களை அச்​சிட்டு வழங்​கு​வ​தாக​வும் அந்த மருத்​து​வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



By admin