ஆழ்கடல் அதியசங்களை தரையிலிருந்து தொட்டு பார்க்க உதவும் ரோபோட்
ஆழ்கடல் ஆய்வில் உதவும் புதிய ரோபோக்களை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஓஷன்ஒன்கே என்ற இந்த ரோபோவால், மனிதர்கள் செல்ல முடியாத மிகவும் ஆபத்தான ஆழ்கடல் சுற்றுச்சூழலை ஆராய முடியும்.
இது மேற்பரப்பில் இருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆழ்கடலில் ரோபோ தொடும் அனைத்தையும் ஹேப்டிக் சிஸ்டம் மூலம் அதை இயக்குபவர்களும் உணர முடியும்.
இந்த ரோபோவால், ஆழ்கடலில் 1000மீ ஆழம் வரை செல்ல முடியும். இதன் முந்தைய மாடல்கள் மென்மையான வரலாற்றுப் கலைப் பொருட்களை மீட்க பயன்படுத்தப்பட்டன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு