• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தின் மூத்த போர் வீரர் மரணம்!

Byadmin

Jul 13, 2025


இங்கிலாந்தின் மூத்த போர் வீரரான டொனால்டு ரோஸ் தனது 110ஆவது வயதில் மரணித்துள்ளார்.

அவரது மரணத்தை எரிவாஷ் நகர சபை தலைவர் ஜேம்ஸ் டாசன் உறுதிப்படுத்தினார்.

“அவர் ஓர் உண்மையான போர் வீரர்” மற்றும் “அவரை ஒரு குடிமகனாகக் கொண்டிருந்தமை எரிவாஷ்க்கு பெருமையாகும்” என்றும் எரிவாஷ் நகர சபை தலைவர் தெரிவித்தார்.

1914ஆம் ஆண்டு டிசெம்பர் 24ஆம் திகதி முதல் உலகப் போருக்குப் பிறகு பிறந்த டொனால்டு ரோஸ், தனது 23ஆவது வயதில் இராணுவத்தில் இணைந்து வட ஆப்பிரிக்கா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

1944ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி நடந்த D-Day யுத்தத்தில் அவர் பங்கேற்றார். அதேபோல், ஜேர்மனியில் உள்ள Bergen Belson Concentration Campஐ விடுவிக்க உதவிய பெருமை அவருக்கு உண்டு.

அவரது சேவைக்காக பிரான்ஸின் உயரிய விருதான Legion d’Honneur வழங்கப்பட்டது.

மேலும், அவர் Victory in Europe Dayயின் 80வது ஆண்டுவிழாவில் 45 போர் வீரர்களுடன் தேசிய நினைவிடத்தில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

“Victory in Europe Dayயை நான் கொண்டாடவில்லை. அப்போது நான் Belsenஇல் இருந்தேன். போரின் முடிவால் நிம்மதி வந்தது” என அங்கு உரையாற்றிய டொனால்டு ரோஸ் தெரிவித்தார்.

By admin