6
இங்கிலாந்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகள் அமுலுக்கு வருகின்றன.
அதன்படி, இங்கிலாந்திற்கு வரும் skilled workers விசாவில் வருவோரின் குறைந்தபட்ச வரும் 38,700 பவுண்ட் முதல் 41,700 பவுண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 111 வகைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இனி இங்கிலாந்திற்குள் வேலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக, care workers அதாவது பராமரிப்பு பணியாளராக இனி யாரும் இங்கிலாந்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தொடர்புடைய செய்தி : பராமரிப்பு பணியாளராக இங்கிலாந்து செல்ல எதிர்பார்த்திருப்போருக்கு அதிர்ச்சி!
மேலும், குடும்ப விசா தொடர்பிலும் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு இறுதியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டு வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை இங்கிலாந்திற்குள் அழைத்துவர முடியாது என்றும் அரசாங்கள் அறிவித்துள்ளது.