• Wed. Jul 16th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் மகாத்மா காந்தி போஸ் கொடுத்த ஓவியம் ஒன்லைன் ஏலத்தில் விற்பனை!

Byadmin

Jul 16, 2025


இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்தின் இலண்டன் நகருக்கு 1931ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சென்றார்.

அங்கு அவரை இங்கிலாந்து ஓவியர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.

அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த ஓவியம், 1974ஆம் ஆண்டு பொதுக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் குறித்த ஓவியம் ஏலம் விடப்பட்டது.

போன்ஹாம்ஸில் நடந்த ஒன்லைன் ஏலத்தில் இந்த காந்தி ஓவியம் 1.7 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் இது 3 மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓர் ஓவியருக்கு போஸ் கொடுத்துள்ளமை இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

By admin