இங்கிலாந்தும் பிரான்ஸும் சிக்கலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்தர்.
இவ்விரு நாடுகளும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் மன்னர் வலியுறுத்தினார். அத்துடன், இராணுவ அச்சுறுத்தல்கள் முதல் காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகளில் ஒன்றாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் மன்னர் வலியுறுத்தினார்.
“பல நூற்றாண்டுகளாக நமது குடிமக்கள் ஒருவரையொருவர் போற்றி, ஒருவரையொருவர் மகிழ்வித்து, ஒருவரையொருவர் பின்பற்றி வருகின்றனர்” என்றும் மன்னர் மூன்றாம் சார்லஸ் சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவி பிரிஜிட் சகிதம் மூன்று நாட்கள் அரச சுற்றுப் பயணமாக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார்.
அவர்களை, மன்னர் மற்றும் ராணி கமிலா, வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் வரவேற்றனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், விண்ட்சர் கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை (08) மாலை நடைபெறும் விருந்தில் இவர்கள் எல்லோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
உக்ரைனுக்கான இராணுவ ஆதரவு போன்ற பிரச்சினைகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நிச்சயமற்ற நிலையில், வர்த்தகம், இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இங்கிலாந்துடன் தொடர்புகளை வலுப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதியின் வருகை அமைவதால், கூட்டாண்மைகளை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்டுகிறது.
டவுனிங் வீதியின் எதிர்வரும் வியாழக்கிழமை (10) இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் நடத்தும் ஓர் இங்கிலாந்து-பிரான்ஸ் உச்சிமாநாடு, கால்வாயின் குறுக்கே சிறிய படகுகளில் சட்டவிரோத இடம்பெயர்வை நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதிக்க வாய்ப்புள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியன்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகிக்கொண்டது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடு ஒன்றின் தலைவர், இங்கிலாந்துக்கு அரச சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளமை இது முதற்தடவையாகும்.
இறுதியாக 2008ஆம் ஆண்டே இங்கிலாந்துக்கு பிரான்ஸ் அரச சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது.
The post இங்கிலாந்தும் பிரான்ஸும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன: மன்னர் சார்லஸ் appeared first on Vanakkam London.