0
இங்கிலாந்தும் இந்தியாவும் வரலாறு காணாத தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இருதரப்பு உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று அந்நாடுகள் தெரிவித்தன.
மூவாண்டுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஆறரை பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் கைகூடியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து பயணித்துள்ளார்.
அவர் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமரைச் சந்தித்தபோது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதன்மூலம், 2040ஆம் ஆண்டிலிருந்து இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு 35 பில்லியன் டொலர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.