• Thu. Jul 24th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து உதவிகள் குறைக்கப்பட்டால் ஆப்பிரிக்கா கடுமையாக பாதிக்கப்படும்!

Byadmin

Jul 23, 2025


வெளிநாடுகளுக்கு வழங்கும் உதவிகளைக் குறைப்பதற்கான அதன் திட்டங்களின் விவரங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது,

இதில் ஆப்பிரிக்காவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்களின் சுகாதாரத்திற்கான ஆதரவு மிகப்பெரிய குறைப்புகளை எதிர்கொள்கிறது.

அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பிறகு, பாதுகாப்பு செலவினங்களை 2.5 சதவீதம் உயர்த்துவதற்காக, 40 சதவீத மொத்த தேசிய வருமானத்தில் வெளிநாட்டு உதவிச் செலவினங்களை 0.5% இலிருந்து 0.3% ஆக கடந்த பெப்ரவரியில் இங்கிலாந்து அரசாங்கம் கூறியது.

வெளியுறவு அலுவலக அறிக்கை மற்றும் தாக்க மதிப்பீடு, இந்த ஆண்டு மிகப்பெரிய நிதிக் குறைப்புகளால் ஆப்பிரிக்கா கடுமையாக பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பெண்களின் சுகாதாரம் மற்றும் நீர் சுகாதாரத்திற்காக குறைவாக செலவிடப்படுவதுடன், நோய் மற்றும் இறப்பு அபாயங்கள் அதிகரிக்கும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

மிகவும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று உதவி அமைப்புகளின் இங்கிலாந்து வலையமைப்பான பாண்ட் கூறுகிறது.

தெற்கு சூடான், எத்தியோப்பியா மற்றும் சோமாலியா போன்ற மனிதாபிமான நெருக்கடிகளை அனுபவிக்கும் நாடுகளுக்கும் பாலஸ்தீனப் பிரதேசங்கள் மற்றும் சூடானுக்கும் இங்கிலாந்து அரசாங்கம் முன்னுரிமையைக் குறைத்து வருகிறது தெளிவாகத் தெரிந்ததாகவும் பாண்ட் சாடுகிறது.

“ஆப்பிரிக்கா, பாலினம், கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கான இருதரப்பு நிதி குறையும் என்பது கவலைக்குரியது” என்று பாண்ட் கொள்கை இயக்குனர் கிடியோன் ராபினோவிட்ஸ் கூறினார்.

By admin