2
இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்டு நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அற்புத விநாயகர் ஆலய வருடாந்த மகோட்சவத் திருவிழா தற்போது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஈழத்துப் போர் நிறைவுற்ற பின்னர், தமிழர்களின் தொன்மையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று மையத்தில் வீற்றுள்ள அற்புத விநாயகப் பெருமானின் மகோட்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
தேர்த் திருவிழாவானது அன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இந்தத் திருவிழா The Mill House, Mill Lane, King’s Sutton, Banbury OX17 3QP என்ற முகவரியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்த் திருவிழாவில் ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
இதில் மங்கள வாத்திய இசைக்கச்சேரியை வழங்கவுள்ள கலைஞர்கள்:
நாதஸ்வர இசைச் செல்வன் S.U. சஞ்சீபன்
நாதஸ்வர இசைத் தென்றல் P.S. சங்கர்
தவில் இசை மாமுரசு M.S. தட்சணாமூர்த்தி
தவில் இசை வேந்தன் கொழும்பு சிவா
இந்த விழாவில் ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மெய்யடியார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் கலந்துகொண்டு, அற்புத விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் சிறப்பிக்குமாறு, ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.





