• Sat. Aug 1st, 2026

24×7 Live News

Apdin News

தாமஸ் ஸ்டீவன்ஸ்: சைக்கிளில் உலகை வலம் வந்த முதல் மனிதர் இந்தியா பற்றி கூறியது என்ன?

Byadmin

Aug 1, 2026


தாமஸ் ஸ்டீவன்ஸ், வட அமெரிக்க கண்டம், ஐரோப்பா, ஆசியா

பட மூலாதாரம், Corbis/Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜூல்ஸ் வெர்ன் எழுதிய புகழ் பெற்ற நாவலான ’80 நாட்களில் உலகைச் சுற்றி’ (Around the World in 80 Days) வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயப் பயணி ஒருவர் உலகைச் சுற்றி வர முடிவு செய்தார்.

அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ததைப் போல இல்லாமல், தாமஸ் ஸ்டீவன்ஸ் தனது பயணத்திற்கு ஒரு மிதிவண்டியைப் (சைக்கிள்) பயன்படுத்த முடிவு செய்தார்.

அவரது பயணம் 1884-இல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. வீடு திரும்பியதும், ‘மிதிவண்டியில் உலகைச் சுற்றி’ (Around the World on a Bicycle) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்தப் புத்தகத்தில், வட அமெரிக்க கண்டம், ஐரோப்பா மற்றும் ஆசியா வழியாகப் பயணித்தபோது தான் பார்த்தவற்றைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருந்தார்.

முதல் இலக்கு – வட அமெரிக்கா

இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீவன்ஸ், 1871-இல் தனது 17-வது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அவர் ஒரு விளையாட்டு வீரர் அல்ல, ஆனால் மிதிவண்டி ஓட்டுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அந்த காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது பணக்காரர்களின் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்பட்டது.

By admin