0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்று நாட்கள் அரச சுற்றுப் பயணமாக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாட்திடும் முகமாக ‘One in, one out’ என வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தம் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு சிக்கலான ஒப்பந்தமாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.
சட்டவிரோத படகுகளை நிறுத்துவதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கையாக புலம்பெயர்வோவைரைத் திருப்பி அனுப்பும் ஒப்பந்தமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ‘One in, one out’ திட்டத்திற்கான ஒரு முன்னோடி அறிவிப்பு மிகவும் சிக்கலான செயல்முறையாக இருக்கக்கூடிய முதல் படியாகும்.
பிரான்ஸில் இருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்த ஒரு புகலிடக் கோரிக்கையாளர், தனக்கு இங்கிலாந்தில் ஒரு குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்ஸுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி!
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளருக்கும் பதிலாக, இங்கிலாந்தில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்ஸில் இருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு இங்கிலாந்து புகலிடம் வழங்கும் வகையில் ‘One in, one out’ ஒப்பந்தம் வடிவடைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகாவிட்டாலும், இந்த திட்டத்தின் கீழ், வாரம் ஒன்றிற்கு 50 பேர் இங்கிலாந்தில் இருந்துபிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.