3
இந்தியா – கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 38 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பியுள்ளது.
குறித்த போர் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று (22) இங்கிலாந்துக்குப் புறப்பட்டது.
இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டொலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் இந்த விமானம் பங்கேற்றிருந்த நிலையிலேயே கோளாறுக்கு உள்ளாகியது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து போர் விமானத்தை வைத்து விளம்பரம் செய்யும் கேரளா சுற்றுலாத்துறை!
இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 இங்கிலாந்து பொறியாளர்கள் கொண்ட குழு, இம்மாதம் 6ஆம் திகதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.