• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஆஸ்டன் புயல்: மணிக்கு 80 மைல் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை

Byadmin

Oct 23, 2026


இங்கிலாந்தின் இன்றும் (23) எதிர்வரும் வார இறுதி நாட்களிலும் ‘ஆஸ்டன்’ புயல் தாக்கக்கூடும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புயல் காரணமாக மணிக்கு 80 மைல் வேகத்தில் கடுமையான காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர காற்று வீசுவதற்கான ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் வரை தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களுக்கு காற்று தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை வரை இந்த மஞ்சள் நிற எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புயல் தாக்கம் காரணமாக மின்சார விநியோகத் தடைகள், போக்குவரத்து இடையூறுகள், கட்டட சேதங்கள் மற்றும் கரையோர வீதிகளில் உயிராபத்துகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

வார இறுதி நாட்கள் மட்டுமன்றி அடுத்த வாரம் முழுவதும் இங்கிலாந்து பிராந்தியம் முழுவதும் நிலையற்ற வானிலையே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நிலவும் குறைந்த காற்றழுத்த நிலைமை காரணமாக நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

By admin