• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

இடைத்தேர்தல்: மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Sep 27, 2026


தென்னம்பட்டு சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்பட அவசர தேவைக்கு போதிய பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
படக்குறிப்பு, தென்னம்பட்டு சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்பட அவசர தேவைக்கு போதிய பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

“மக்களுக்காக வேலை செய்வார் என்பதால் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட்டோம். அவர் கட்சி மாறியதில் எங்களுக்கு வருத்தம் தான்” என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வசிக்கும் கண்ணம்மாள்.

அங்கே ஆளும்கட்சியான த.வெ.கவும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பரப்புரையில் கூடுதல் வேகம் காட்டி வருகின்றன.

இடைத்தேர்தல் தொடர்பாக மதுராந்தகம் தொகுதி மக்களின் மனநிலை என்ன? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

மதுராந்தகம் (தனி)

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இத்தொகுதியில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன.

By admin