• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

‘டோரதி’ தமிழ்த் திரைப்படம் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் ஏன்? ஒரு பார்வை

Byadmin

Sep 26, 2026


பால் புதுமையினர், டோரதி, இளையராஜா

படக்குறிப்பு, ‘டோரதி’ இயக்குநர் கார்த்தி சுப்புராஜுடன், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த்.

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘டோரதி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இளையராஜாவின் பாடல்களுக்காகவும், அது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம் என்பதற்காகவும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 11, 12, 20 ஆகிய தேதிகளில் புகழ்பெற்ற டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரையிடப்பட்டு, பெரும் பாராட்டையும் பெற்றது.

ஆனால், திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது (செப்டம்பர் 25) முதல் இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்படம் ‘நன்றாக உள்ளது, இல்லை’ என்பதைக் கடந்து, அத்திரைப்படம் கையாண்டுள்ள பால் புதுமையினர் (LGBTIQA+) கதாபாத்திரங்கள், கருத்துகள் தான் பெரும்பாலும் இந்த எதிர்மறை விமர்சனங்களின் பின்னணியில் உள்ளன.

பாராட்டுகளும் எதிர்மறை விமர்சனங்களும்

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா

திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என பல தரப்புகளில் இருந்து இப்படத்திற்கு பாராட்டுகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தாலும், மறுபுறம் இணையத்தில் இப்படம் குறித்த ‘ட்ரோல்கள்’, எதிர்மறையான விமர்சனங்களையும் அதிகம் காண முடிகிறது.

By admin