• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்பெர்ம் திமிங்கலம் தனது தலையில் உள்ள மர்ம உறுப்பு மூலம் ஒரு கப்பலையே மூழ்கடிப்பது எப்படி?

Byadmin

Sep 26, 2026


திமிங்கலத்தால் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும்.

படக்குறிப்பு, திமிங்கலத்தால் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும்.

    • எழுதியவர், அண்ணா பிரெஸ்ஸானின்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘மொபி டிக்’ (Moby Dick) நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, ஸ்பெர்ம் திமிங்கலம் (Sperm Whale) தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20, 1820 அன்று காலையில், 15 வயதுடைய தாமஸ் நிக்கர்சன், திமிங்கலம் ஒன்று தனது படகின் பக்கவாட்டில் ஓட்டை போட்டதிலிருந்து அப்பொழுதுதான் தப்பியிருந்தார். படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், பிரதான திமிங்கல வேட்டைக் கப்பலை நோக்கி விரைவாகத் துடுப்பு போட்டுச் சென்ற நிக்கர்சனும் அவரது தோழர்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர்.

ஆனால், ‘எசெக்ஸ்’ (Essex) என்ற அந்த திமிங்கல வேட்டைக் கப்பலின் பாய்மரப் பகுதியைப் பார்த்த நிக்கர்சன், மற்றொரு மிகப் பெரிய திமிங்கலம் தங்களை நோக்கி நேராக வேகமாக வருவதைக் கண்டார். கப்பலின் முதன்மைத் துணை அதிகாரியான ஓவன் சேஸை எச்சரித்தவுடன், பணியாளர்கள் மத்தியில் கூச்சலும் பீதியும் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து “ஒரு பயங்கரமான மோதல்” நிகழ்ந்ததாக நிக்கர்சன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியுள்ளார்.

அந்தத் திமிங்கலம் ‘எசெக்ஸ்’ கப்பல் மீது எந்தளவுக்குப் பலமான தாக்குதலைத் தொடுத்தது என்றால், அங்கிருந்த அனைத்து மாலுமிகளும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். திமிங்கலம் படகிலிருந்து 900 அடி (270 மீட்டர்) தூரத்திற்கு அப்பால் நீந்திச் சென்று, திடீரென்று வேகமாகத் திரும்பி மீண்டும் தனது முழு வேகத்துடன் மோத வந்தது. அந்த இரண்டாவது மோதலில், அது கப்பலின் முன்பகுதியை முற்றிலுமாகத் சிதைத்துவிட்டது. ‘எசெக்ஸ்’ திமிங்கல வேட்டைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

இந்த ‘எசெக்ஸ்’ கப்பல் விபத்துதான் ஹெர்மன் மெல்வில்லின் ‘மொபி டிக்’ நாவலுக்கு வித்திட்டது. இன்று, அந்தப் புத்தகம் வெளியாகி 175 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தத் திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு வீழ்த்த முடியும் என்ற மர்மத்தை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கான விடையை, 200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு யாருமல்ல, ‘எசெக்ஸ்’ கப்பலின் முதன்மை அதிகாரியான சேஸ் மிகச் சரியாகக் கணித்திருந்தார் என்பதுதான் உண்மை.

By admin