• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

ஞாயிறன்று வங்கிகள் இயங்கும்: வழக்கமான வேலை நாள் போல எல்லா சேவைகளும் கிடைக்குமா?

Byadmin

Sep 26, 2026


வங்கி ஊழியர் ஸ்டிரைக், ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பு

படக்குறிப்பு, கோப்புப் படம்

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி மாத இறுதி நாட்களான 28, 29, 30 ஆகிய தேதிகளில் முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (UFBU) அறிவித்துள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஞாயிற்றுக்கிழமை ( செப் 27 ) வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறுதியில் வழங்கப்படும் மாத ஊதியம் இம்முறை சற்று முன்கூட்டியே (வெள்ளிக்கிழமை செப் 25) வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டாலும், இன்றும் பணத்தையே பிரதானமாக கொண்டு இயங்கும் சிறு வியாபாரிகள் பலரும் இதனால் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறுகின்றனர்.

எனினும், அவசரத் தேவைக்கு பணம் அல்லது நகைக்கடன் பெற முடியாமல் இக்கட்டை சந்திக்க நேரிடலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

By admin