பிளின்கிட் ஆதரவு
நாய்களின் உரிமையாளர்களும் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த நாய்களுக்காகப் போஸ்டர்கள் அடித்து, சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ‘குட்டா சிங்’ என்ற நாய்க்கு ஆதரவு அலை அதிகமாக உள்ளது.
பிரபல விரைவு விநியோக நிறுவனமான ‘பிளின்கிட்‘ இந்த சுவாரசியமான போட்டியில் இணைந்து, தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. “ரோகினியைச் சேர்ந்த குட்டா சிங்கிற்கு எங்களது முழு ஆதரவு” என்று அந்த நாய் படத்தைப் பகிர்ந்து பிளின்கிட் பதிவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, போட்டியில் வெற்றி பெறும் நாய்க்கு இலவச நாய் தீவனங்கள் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் வெற்றி பெறும் நாய்க்குப் பட்டத்துடன் சேர்த்துப் பரிசுகளும் வழங்கவுள்ளன.