• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

வேற்றுக்கிரக உயிரினங்கள் நம்மை நோயுறச் செய்ய முடியுமா? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Sep 26, 2026


வேற்றுக்கிரக உயிரினங்கள், விண்வெளி, நாசா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நாசாவின் ‘பெர்சிவரன்ஸ்’ ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. நமது பூமியைப் போன்ற வளிமண்டலத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிரகங்களை வானியலாளர்கள் விண்வெளியில் தேடி வருகின்றனர். மேலும், நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள தொலைதூர கிரகங்களில் இருந்து வரக்கூடிய சமிக்ஞைகளையும் நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம்.

இந்தச் சிக்கலான அனைத்துப் பணிகளுக்கும் ஒரு பொதுவான நோக்கம் உள்ளது: பூமிக்கு அப்பால் உயிரினங்கள் வாழ முடியுமா அல்லது எப்போதாவது வாழ்ந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதே அதுவாகும்.

பல பத்தாண்டுகளாக மனிதர்கள் நமது கிரகத்தைத் தாண்டி பிற இடங்களில் உயிர்களுக்கான அறிகுறிகளைத் தேடி வருகின்றனர். ஆனால், திரைப்படங்களில் நாம் பார்க்கும் பச்சை நிற வேற்றுக்கிரகவாசிகளைப் போல எந்தவொரு வேற்றுக்கிரக உயிரினமும் இருக்க வேண்டியதில்லை.

உண்மையில், அவை நுண்ணுயிரிகளாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (இஎஸ்ஏ) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த விண்வெளி உயிரியலாளரும் எழுத்தாளருமான மைக்கேலா முசிலோவா கூறுகிறார்.

ஆனால், விண்வெளியில் நுண்ணுயிர் உயிரினங்களை நாம் கண்டறிந்தால், அவற்றால் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படுமா? மேலும், நமது கிரகத்திலிருந்து வெகு தொலைவுக்குப் பயணிக்கும்போது, இந்த நுண்ணுயிரிகளை அறியாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்பவர்களாக நாமே இருக்க முடியுமா?

By admin