• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

இடைத்தேர்தல் முடிவு பற்றி திமுக, அதிமுக, இடதுசாரிகள் கூறுவது என்ன? ஒரு தொகுப்பு

Byadmin

Oct 10, 2026


இடைத்தேர்தல் முடிவு பற்றி திமுக, அதிமுக, இடதுசாரிகள் கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தவெக கூட்டணி இடைத்தேர்தல் முடிவை மக்கள் தங்களுக்கு அளித்த அங்கீகாரமாக முன்னிறுத்துகின்றனர். “இந்தத் தேர்தலில் பணபலமின்றி, அன்பு மற்றும் ஜனநாயகம் சார்ந்த ஃபார்முலாவைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக” த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிகார பலத்தைப் பயன்படுத்தியே இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றுள்ளதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தேர்தல் முடிவுகளைக் கடந்து மக்கள் பணி தொடரும் என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

‘அன்பு மற்றும் ஜனநாயக ஃபார்முலா மூலம் வெற்றி’

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தனது எக்ஸ் பதிவில், தனிப்பட்ட அவதூறு பேச்சுகளுக்கும் தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்கும் மக்கள் இடைத்தேர்தல் மூலம் தகுந்த பதிலடி தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு நாள்கள் மட்டுமே பிரசாரம் செய்ததை விமர்சித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர். அவதூறு பேச்சுகளுக்கும் தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்கும் மக்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin