அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப்பின் வலது கை, இரு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவரது உடல் நிலை பற்றியும் அதிகம் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புக்கு நரம்பு சம்பந்தப்பட்ட குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
79 வயதுடைய டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கெரொலைன் லவிட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அடிக்கடி கைகுலுக்குதல் மற்றும் இதய சிகிச்சைக்காக உட்கொள்ளும் மாத்திரை ஆகியவற்றால் டிரம்ப்பின் வலது கையில் நிற மாற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க முதல் பெண்மணி லவிட் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர்த்து டிரம்ப்பின் உடல் நிலை சீராகவே உள்ளதாக அவரது மருத்துவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
The post இணையத்தில் விவாதிக்கப்படும் டிரம்ப்பின் தோல் நோய்! appeared first on Vanakkam London.