• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் கௌரவம்

Byadmin

Jul 9, 2025


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், மோடி நேற்று பிரேசில் சென்றார். பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து பிரேசில் ஜனாதிபதி லுலா டி சில்வாவை மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு மற்றும் வர்த்தகம் உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

அத்துடன், இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான “Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி, அந்நாட்டு ஜனாதிபதி கௌரவித்தார்.

“இது எனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நமீபியா சென்றடைந்தார்.

அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா

By admin