• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

Byadmin

Sep 28, 2024


இந்தியா - இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

  • எழுதியவர், இஷாத்ரிதா லஹரி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே காணப்படும் நட்புறவை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கதேசத்தின் மறுசீரமைப்புக்கு யூனுஸ் ‘அதிக முயற்சிகளை’ மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். அதன் பின்னர் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இந்த அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார். நியூயார்க்கில் யூனுஸ் மற்றும் பைடன் இடையேயான நட்பு மோதி அரசுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும்.

By admin