
உலகளவில் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடி.

புகையிலையினால் ஆண்டுதோறும் ஏற்படும் 30 லட்சம் மரணங்களில், 70 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் சிகரெட் புகைப்பதால் ஏற்படுகின்றன.

புகைபிடிக்காமல் பிறர் வெளியிடும் புகையை சுவாசித்ததால் மட்டுமே ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

உலகளவில் சிகரெட் புகைப்பவர்களில் 82 சதவீதம் பேர் ஆண்கள், பெண்களில் 2 முதல் 3 சதவீதம் பேர்.

இந்தியாவில் 2010-ல் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிகரெட் புகைப்பவர்கள் 9.7 சதவீதம். 2025-ல் 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.

சிகரெட் பயன்பாடு குறைய முக்கிய காரணம் அதன் மீதான உலக நாடுகளின் கடுமையான வரி உயர்வுதான்.

புகையிலை பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, பொது இடங்களில் புகைபிடிக்க தடை, அபராதம் போன்ற கடுமையான விதிகளும் ஆரோக்கியமான மாற்றத்திற்கு காரணம்.