• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா–சீனா உறவு குறித்து அதிகாரி கூறிய கருத்து என்ன? அதனால் மீண்டும் கவலை எழுவது ஏன்?

Byadmin

Oct 29, 2026


இந்தியா-சீனா உறவுகள், இந்தியா, சீனா, அருணாச்சலபிரதேசம், இமயமலைப் பகுதி, எல்லைப் பிரச்னை

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் ஒரு மென்மையான, ஆனால் நிலையற்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

    • எழுதியவர், அன்பரசன் எதிராஜன்
    • பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இந்தியா–சீனா இடையிலான உறவுகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகத் தெரிந்தது.

எனினும், இமயமலைப் பகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாகச் சீரற்ற நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள், 2020-ஆம் ஆண்டு மோதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் சுமூகமான சூழல், வெளிப்படையாகத் தெரிவதைவிட மேலும் பலவீனமானதாக இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன.

இந்தியா–சீனா எல்லைப் பகுதியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனப் படைகள் பெருமளவில் மீண்டும் ஊடுருவியதாகவும், இந்தியாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பகுதிக்குள் பல கிலோமீட்டர் தொலைவு வரை கூடாரங்களை அமைத்ததாகவும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.

இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் வெளியிட்ட இந்தக் கருத்துகள், இந்தியாவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.



By admin