• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? ஓர் அலசல்

Byadmin

Jul 11, 2026


பிரமோஸ், இந்தியா, ரஷ்யா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 10 ஜூன் 2026 அன்று ரஷ்யாவின் கிரோன்ஸ்டாட்டில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஃப்ளீட்-2026’ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது அதிகம் விவாதிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள் எஸ்-400 (S-400) மற்றும் பிரமோஸ் (BrahMos) ஆகும்.

எஸ்-400 ஏவுகணையை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது, பிரமோஸ் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியாகும். எஸ்-400 தற்காப்பு ஆயுதமாகவும், பிரமோஸ் தாக்குதல் ஆயுதமாகவும் உள்ளது.

அதாவது, எஸ்-400 எதிரிகளின் தாக்குதல்களைத் தடுக்கிறது, பிரமோஸ் தாக்குதல் நடத்துகிறது.

பிரமோஸ் ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை. தற்போது இந்தியா இதை ஏற்றுமதியும் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது.

By admin