• Sat. Jul 26th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூருக்கு எவ்வாறு சாதகம்?

Byadmin

Jul 26, 2025


இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தமிழ்நாடு, கோவை, திருப்பூர், கரூர்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்கள், பியூஷ் கோயல் மற்றும் ஜோனாதன் ரெனால்ட்ஸ்

பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால், தமிழகத்திலுள்ள ஜவுளித்துறைக்கும், பொறியியல் துறைக்கும் பெரும் பலன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்குமென்றும், அதில் தமிழகத்துக்கான பலன் அதிகமாகக் கிடைக்குமென்றும் ஜவுளித்தொழில் அமைப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும் அதிகரிக்குமென்றும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு கணித்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவை விட பிரிட்டனுக்கே அதிக சாதகமாக இருக்குமென்று கூறும் வேறு சில தொழில் அமைப்பினர், சிறு, குறுந்தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

By admin