• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா போன்ற நாடுகள் ஏன் அந்நியச் செலாவணியை சேமித்து வைக்கின்றன?

Byadmin

May 15, 2026


அந்நியச் செலாவணி கையிருப்பு, பணப் பரிமாற்றம், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், ஏற்றுமதி, இறக்குமதி, அமெரிக்கா, வரிவிதிப்பு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா ஒரு வலுவான நிலையை அடைய, அதன் அந்நியச் செலாவணிக் கையிருப்பை குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவிடம் 690 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. அதாவது ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய இன்னும் 310 பில்லியன் டாலர்கள் குறைவாக உள்ளது.

“குறிப்பாகச் சந்தை நிலையை கருத்தில் கொள்ளும்போது, ​​அந்நியச் செலாவணி கையிருப்பின் அளவு மிகவும் முக்கியமானதாகும்” என்று இந்த ஆண்டு மார்ச் 16 அன்று ‘பேசிஸ் பாயிண்ட்’ இதழில் வெளியான ஒரு கட்டுரையில் பத்ரா எழுதியுள்ளார்.

“இதில் சுமார் 350 பில்லியன் டாலர்கள், ஓராண்டிற்குள் செலுத்த வேண்டிய அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் ஈடுகட்டத் தேவைப்படும். மீதமுள்ள 650 பில்லியன் டாலர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறும் பட்சத்தில், ஒரு பாதுகாப்பு அரணாக செயல்பட தேவைப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

”இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கு குறைந்தது 1 டிரில்லியன் டாலராக இருக்க வேண்டும். ‘குறைந்தது’ என்று குறிப்பிட்டதற்கான காரணம் என்னவென்றால், அந்த கையிருப்பில் எவ்வளவு தொகை உண்மையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய நிலையில் கிடைக்கும் என்பதையும் நாம் கணக்கிட வேண்டியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

By admin