• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா போர் விமான இன்ஜின் தயாரிப்பில் அமெரிக்க சார்பை குறைக்க முயல்கிறதா? எப்படி?

Byadmin

Aug 15, 2026


தேஜஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் போர் விமான திட்டத்திற்கான இன்ஜின்களை தயாரிக்க பிரிட்டன் நிறுவனமான ரோல்ஸ் ராய்சுடன் கூட்டு சேர இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தது.

இந்தக் கூட்டணி, மிகவும் மேம்பட்ட ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்குவதற்கான இந்தியாவுடைய திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது.

இந்த மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானத்தின் மாதிரி 2028இல் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானம் எதிர்காலத்தில் இந்தியாவின் வான் தாக்குதல் திறன்களில் மிக முக்கியமான பங்கை வகிக்க உள்ளது.

ராய்டர்ஸ் செய்தி முகமையின்படி, கடந்த ஆண்டு இந்தியா தனது மேம்பட்ட ஸ்டெல்த் போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான கட்டமைப்புக்கு ஒப்புதல் வழங்கியதோடு பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

By admin