• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

Byadmin

Aug 15, 2026


இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன் அதிசய கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளமை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தின் எருகலப்புடியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஆசிரமத்தில் வளர்க்கப்படும் ஒரு பசுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகத்தினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த மருத்துவர்கள், பிரசவத்தை முடிப்பதற்கு சுமார் ஐந்து மணிநேரம் கடுமையாக உழைத்தனர். இருப்பினும், கருப்பையிலிருந்து வெளிவந்த கன்றைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அந்தக் கன்று, இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் ஒரு விசித்திரமான வடிவத்தில் பிறந்திருந்தது.

இதையறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் மருத்துவமனை ஆசிரமத்திற்கு சென்று, அந்த விசித்திரமான கன்றை ஆர்வத்துடன் பார்த்தனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் மக்கள் கன்றைப் பார்க்கச் சென்றதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து கூறிய கால்நடை துறை மருத்துவர்கள், ‘இதுபோன்ற பிறப்பு மிகவும் அரிதானது. கரு வளர்ச்சியின்போது ஏற்படும் அரிதான குறைபாடுகளால், விலங்குகள் இதுபோன்ற உடல் மாற்றங்களுடன் பிறக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.

By admin