• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

சுதந்திர தின விழா: முதல்முறை கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய் – புகைப்படத் தொகுப்பு

Byadmin

Aug 15, 2026


முதல்முறையாக கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

தலைநகர் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை புகைப்படத் தொகுப்பாக இங்கு பார்ப்போம்.

வாகன அணிவகுப்போடு அழைத்து வரும் தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையால் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாகன அணிவகுப்போடு அழைத்து வரப்பட்டார்.
முப்படைகளின் உயரதிகாரிகள் அறிமுகம்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் முப்படைகளின் உயரதிகாரிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அறிமுகம் செய்து வைக்கும் தலைமை செயலாளர் சாய்குமார்
காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்.
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, நாட்டின் 80வது சுதந்திர தின விழாவையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
எம். கிருஷ்ணசாமிக்கு சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாட்டிற்குப் பங்காற்றியவர் என்ற வகையில் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கிருஷ்ணசாமிக்கு சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். இந்த விருதுடன் விருதுத் தொகையாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.
சர்க்கரை நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி. மோகன் அவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்  விருதை முதலமைச்சர் வழங்கினார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, நீரிழிவு நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி. மோகன் அவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் வழங்கினார். ( டாக்டர் மோகன் சார்பில் அவரது மகள் இந்த விருதை பெற்றுக் கொண்டார்)
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கோவை மாவட்டத்தை சேர்ந்த செல்வி நெளஷீன் பானு சந்த் அவர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நெளஷீன் பானு சந்த்-க்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சென்னை மாநகராட்சியில் சிறப்பாகச் செயல்பட்ட மண்டலங்கள் மற்றும் கோவை, தஞ்சாவூர் மாநகராட்சிகள், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரம் ஆகிய நகராட்சிகள், திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்ட சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
சுதந்திர தின விழாவில் இராணுவக் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சுதந்திர தின விழாவில் ராணுவக் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்
சுதந்திர தின விழாவின் போது விருது வென்றவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சுதந்திர தின விழாவின்போது விருது பெற்றவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்.
சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இனிப்புகள் வழங்கினார்.

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இனிப்புகளை வழங்கினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin