• Thu. Sep 26th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா – வங்கதேசம்: இரு நாட்டு உறவில் மீன்களால் ஏற்பட்ட சிக்கல் – என்ன பிரச்னை?

Byadmin

Sep 25, 2024


காணொளிக் குறிப்பு, பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாதது

இந்தியா – வங்கதேசம்: இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தும் ஹில்சா மீன்

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த ஆண்டு துர்கா பூஜையின்போது இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாது என வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறியது மேற்கு வங்கத்தின் உணவு பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.

இந்திய- வங்கதேச சர்வதேச எல்லைக்கு இருபுறமும் உள்ள வங்காளிகளுக்கு ஹில்சா மீன் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது ஹில்சா மீன் ஏற்றுமதிக்கு விதித்த தடையை வங்கதேசம் சில நாட்களிலேயே விலக்கிக்கொண்டுள்ளது. எனினும், முதலில் விதிக்கப்பட்ட தடை வங்காளிகளை திகைப்புக்கு உள்ளாக்கியது. காரணம், துர்கா பூஜையின்போது ஹில்சா மீன்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதன் சுவையும் பாரம்பரியமும் இதற்கு காரணம்.

ஹில்சா விவகாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவை இது பாதிக்கும் என வங்கத்தில் உள்ள மக்கள் கருதவில்லை

ஹில்சா மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள மீன் வியாபாரிகள் பலர், வங்கதேசம் சட்டப்பூர்வமாக ஹில்சா மீன்களை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றால், கடத்தல் வழியாக அவை வரும் என கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பண்டிகை காலத்தின்போது இந்தியா – வங்கதேசத்துக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இலிஸ் மீன் விவகாரம் இருந்தது. இந்த ஆண்டு இந்த பாரம்பரியம் உடைய இருந்தது. எனினும், ஹில்சா மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் முடிவை வங்கதேசத்தின் இடைக்கால அரசு துர்கா பூஜைக்கு முன்னதாக திரும்ப பெற்றிருக்கிறது.

By admin