• Wed. Jul 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘இந்தியா விமானங்களை இழக்க காரணம்’- பாகிஸ்தானுடனான மோதல் குறித்து ராணுவ அதிகாரி பேசியது என்ன?

Byadmin

Jul 1, 2025


மே 7 அன்று, பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத மறைவிடங்களை இந்தியா குறிவைத்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 7 அன்று, பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத மறைவிடங்களை இந்தியா குறிவைத்தது.

கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் தான், தற்போது இந்த விவாதம் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்ததற்கு காரணம்.

இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரி (Defence Attache) ஒருவர் பாகிஸ்தானில் இந்தியாவின் ‘சிந்தூர் ஆபரேஷன்’ நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிடிஐ செய்தி முகமையின்படி, ஜகார்தாவில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஆரம்பக்கட்டத்தில் “இந்திய விமானப் படை விமானங்களை இழந்தன என்றும் அரசியல் தலைமையிடம் இருந்து சில தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும்,” கூறியதாக தகவல் வெளியானது.

அதன்பின், அவருடைய நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக, இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin