0
இந்தியா – தெலங்கானா மாநிலத்தில் உள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் பலர் தீக் காயமடைந்துள்ளனர். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பால் தொழிற்சாலையே இடிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணி நடைபெறுகிறது.
தொழிற்சாலையிலிருந்து கரும்புகை எழுவதைக் காட்டும் காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன.
சம்பவம் குறித்துத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வேதனை தெரிவித்தார்.
வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.