14
டெல்லிக்கு இன்று (27) விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்த விஜய்க்கு அங்கு அரச மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட விஜய், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இன்று காலை முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது டெல்லி பயணம் இதுவாகும்.