• Wed. May 27th, 2026

24×7 Live News

Apdin News

சதத்தை தவறவிட்டாலும் சிறப்பான ஆட்டம்..!- சூர்யவன்ஷிக்கு ப.சிதம்பரம் பாராட்டு

Byadmin

May 27, 2026


ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் சுற்றில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பஞ்சாபில் மோதிவருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் அடித்தது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக 29 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி 97 ரன்கள் அடித்தார். இதில் 12 சிக்ஸ்ர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். மேலும் இப்போட்டி மூலம் கிறிஸ் கெயிலின் நீண்டகால சாதனையையும் வைபவ் முறியடித்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான IPL Eliminator போட்டியில் 29 பந்துகளுக்கு 97 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சதத்தை தவறவிட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ப. சிதம்பரம் புகழ்ந்துள்ளார்.

By admin