• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய மெட்ரோ ரயில்களில் பல கோடி கொட்டியும் எதிர்பார்த்த பயன் கிடைக்காதது ஏன்?

Byadmin

Apr 27, 2026


இந்தியா பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்பை உருவாக்குவதற்காக 26 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

கடந்த மாதம் ஒரு வார நாளின் மாலைப் பொழுதில், மும்பையின் ‘அக்வா லைன்’ மெட்ரோ பாதையில் தெற்கு நோக்கிச் சென்ற ஒரு ரயில், அதன் கடைசி நிறுத்தம் வருவதற்குச் சில நிலையங்களுக்கு முன்பாகவே ஏறக்குறைய ஆளரவமற்ற நிலையை அடைந்துவிட்டது.

பயணிகள் கடைசி நிலையத்தில் இறங்கியபோது, அந்த இடம் வழக்கத்திற்கு மாறாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மக்கள் சாதாரணமாக நிற்பதற்குக்கூட இடம் பிடிக்கப் போட்டியிடும் மும்பை போன்ற ஒரு நெரிசல் மிகுந்த நகரத்தின் பரபரப்பான ரயில் முனையம் போலத் தோன்றுவதற்குப் பதிலாக, அந்த நிலையம் அமைதியாகவும் காலியாகவும், ஏறக்குறைய பழைய சோவியத் கால கட்டடம் போலவும் காட்சியளித்தது.

‘அக்வா லைன்’ என்பது மும்பையின் புதிய, முழுமையாக நிலத்தடியில் செல்லும் மெட்ரோ பாதையாகும்.

இது ‘கஃபே பரேட்’ என்ற நகரின் பழைய வணிகப் பகுதியை, ‘பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்’ போன்ற புதிய வணிக மையங்களுடனும், வடக்கு புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள விமான நிலைய முனையங்களுடனும் இணைக்கிறது. இந்தப் பாதை கடந்த ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த மெட்ரோ வழித்தடம் 33.5கி.மீ நீளம் கொண்டது. இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தினமும் சுமார் 1.5 மில்லியன் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று அதிகாரிகள் கணித்திருந்தனர்.

By admin