• Sun. Jul 6th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய விமானப்படை 3 போர்களில் பயன்படுத்திய விமான ஓடுபாதை விற்பனையா? புதிய சர்ச்சை

Byadmin

Jul 6, 2025


ஓடுதளம், பஞ்சாப், இந்திய விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்த தாய் மகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

    • எழுதியவர், ஹர்மந்தீப் சிங் / குல்தீப் ப்ரார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

விமானப்படை தளங்களின் ஓடுதளம் என்று யாராவது கேட்டால் உடனே அவர்களின் மனதில் தோன்றி மறைவது போர் விமானங்கள் பறப்பதும் அதனால் ஏற்படும் சத்தமும்தான். ஆனால் பஞ்சாபில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஓடுதளம் மோசடி வழக்கு பின்னணியில் பேசுபொருளாகியுள்ளது.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஃபதுவாலா கிராமத்தில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளம் ஒன்றை விற்பனை செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளுடன் இந்தியா போர் புரிந்த போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் இந்த ஓடுதளத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தியது.

இந்த ஓடுதளம் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு தற்போது கோடிக்கணக்கில் இருக்கிறது. 1997-ஆம் ஆண்டு இந்த நிலத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த வழக்கில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin