• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி கட்ட முயற்சிகள் என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Oct 31, 2026


இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு, 1984, சீக்கிய சமூகம்

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி இந்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(2017இல் வெளியான இந்தக் கட்டுரை, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை (அக்டோபர் 31) முன்னிட்டு மீண்டும் பகிரப்படுகிறது)

இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல.

இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரில்தான். நோயிலிருந்து குணமடையாத அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியின்மீது கல் வீசி எறியப்பட்டு, அவரது மூக்கு எலும்பு உடைந்தது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மதியம் புவனேஷ்வரில் இந்திரா காந்தி ஆற்றிய தேர்தல் உரையை வழக்கம்போல் தயாரித்தவர் அவரது தகவல் ஆலோசகரான எச்.ஒய்.சாரதா பிரசாத்.

ஆனால், தயாரிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆச்சரியப்படும் விதமாக தன் விருப்பப்படி பேச ஆரம்பித்துவிட்டார் இந்திரா காந்தி.



By admin