• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரேலில் சுமார் 20% பேர் அரேபியர்: யூத நாட்டில் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை எப்படி?

Byadmin

Oct 31, 2026


இஸ்ரேலிய அரபு முஸ்லிம்கள்

படக்குறிப்பு, இஸ்ரேலிய அரபு முஸ்லிம்கள் ஒரு அரபு கட்சிக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்டனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள், இந்த முறை அரபு கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. அங்கு வாழும் அரபு மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

இஸ்ரேல் ஒரு யூத நாடாகும். அப்படியிருக்க, அங்கு இவ்வளவு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இருப்பது எப்படி?

1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானபோது, அந்தப் பகுதியில் வாழ்ந்த லட்சக்கணக்கான அரபு மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறினர்.

ஆனால், அங்கேயே தங்கியிருந்தவர்களுக்கு இஸ்ரேல் அரசு குடியுரிமை வழங்கியது. தற்போது அவர்கள் இஸ்ரேலிய அரபுகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இஸ்ரேலில் வாழும் அரபு மக்கள், அந்நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினராக உள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் வாழும் அரபு பாலத்தீனர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டவர்கள்.



By admin