திருப்பதியில் நேற்று 64,014 பேர் தரிசனம் செய்தனர். 22,010 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் என்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
புரட்டாசி மாதம் முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்னாப் புயல் உருவாகி ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள்
இதனால் தரிசனத்திற்கு குறைந்த அளவு பக்தர்கள் வந்து செய்கின்றனர். இதனால் பக்தர்கள் 6 மணி முதல் 8 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 64,014 பேர் தரிசனம் செய்தனர். 22,010 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.36 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.