• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

மட்டன் உப்புக்கறி

Byadmin

Oct 31, 2026


தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்-10

சீரகம்- 1 டீஸ்பூன்

தனியா தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 குழிகரண்டி

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை-2 கொத்து

செய்முறை:

ஆட்டுக்கறியை (மட்டன்) நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி எடுத்துக்கொள்ளவும்.

கறியுடன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது, காய்ந்த மிளகாயைப் போட்டு வதக்கி வெந்த ஆட்டுக்கறியை சேர்க்கவும்.

ஆட்டுக்கறியை சேர்த்து கிளறிய பின்னர், தனியா தூள், மிளகுத்தூள் போட்டு நன்றாக முறுகலாக வறுத்தால் சுவையான மட்டன் உப்புக்கறி தயார்.

தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்

By admin