• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்துக்களை பொறுத்துக் கொள்கிறோம்.. இந்தியா செல்வதைவிட அவர்கள் இங்கேயே இருக்க விரும்புகிறார்கள் – பாகிஸ்தான் அதிபர்

Byadmin

Aug 16, 2026


சர்ச்சை

தொடர்ந்து அவர் பேசிய வார்த்தை சர்ச்சை ஆகியுள்ளது. அவர் கூறியதாவது, “இந்தியர்கள் ‘அகண்ட பாரத’ தத்துவத்தை நம்புகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினரை முஸ்லிம்கள் ‘பொறுத்துக் கொள்கிறார்கள்'” என குறிப்பிட்டுள்ளார். Tolerate என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஜர்தாரியின் இந்த பேச்சுக்கு இந்தியாவில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அதிபர் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைக் குறிப்பிட்டுப் பிரிவினைவாத அரசியலைச் செய்ய முயல்கிறார் என்றும், மற்ற நாடுகளைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டுத் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் தொகை

மேலும் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 4 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றனர் என்ற அதிபரின் கூற்று முரண்டபாடாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் 2023ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்குள்ள இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 52 லட்சம், அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.17% மட்டுமே ஆகும்.

By admin