• Tue. Jul 22nd, 2025

24×7 Live News

Apdin News

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் கர்ப்பிணி உட்பட ஐவர் உயிரிழப்பு!

Byadmin

Jul 22, 2025


இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மீட்புப் பணியினரின் துரித செயற்பாட்டால் கப்பலில் இருந்த 284 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கர்ப்பிணி ஒருவர் உட்பட ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சுலாவெசித் தீவுக்கு அப்பால் நேற்று (20) பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த கப்பலில் தீ ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி : பாலி தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்து; ஆஸி. பெண் உயிரிழப்பு!

தீ கப்பல் முழுவதும் பரவியமையால் பலர் கடலில் குதித்தனர். உயிர்க்காப்பு உடை அணிந்து கடலில் குதித்தவர்கள் உதவி கிடைக்கும் வரைக் காத்திருந்தனர்.

அந்த வட்டாரத்திலிருந்த 3 கடற்படைக் கப்பல்களும் மீனவப் படகுகளும் விரைவாக உதவிக்குச் சென்றன.

இந்த தீ விபத்தால் சம்பவ பகுதி கரும்புகை மூட்டமாகக் காணப்பட்டது.

இம்மாதத் தொடக்கத்தில் பாலி தீவுக்கு அருகே படகு மூழ்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காணாமல்போயிருந்தனர்.

அத்துடன், கடந்த வாரம் மெந்தாவாய் தீவுகளுக்கு அருகே படகு ஒன்று மூழ்கியது. எனினும், அதில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

By admin