• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

‘இன்னும் 6 மாதங்கள் நீடித்தால்’ – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை என்ன?

Byadmin

May 21, 2026


இந்திய எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் விலை, இந்தியா, பொருளாதாரம், ஹோர்முஸ் நீரிணை, மத்திய கிழக்கு, இரான், அமெரிக்கா, இந்தியப் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் நீடித்து வரும் நெருக்கடி நிலைமை இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளது

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரே வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன. ஒரே வாரத்தில் லிட்டருக்கு சுமார் நான்கு ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி இறுதியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு வர முடியாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சூழ்நிலை இவ்வாறே நீடித்தால், எதிர்வரும் நாட்களில் எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உயர்ந்து வரும் எண்ணெய் விலைகளின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கக்கூடும்.

கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60 முதல் 65 டாலர் என்ற அளவில் இருந்தபோது, 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.

By admin