0
இன்று வியாழக்கிழமை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீண்டும் விசாக்களை வழங்கவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்த இது ஒரு முயற்சி என்று கருதப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சீன முதலீடுகள் மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததுடன், டிக்டாக் உட்பட பல சீனச் செயலிகளுக்கும் தடை விதித்தது.
சீனாவும் பதிலுக்கு இந்தியப் பயணிகளுக்கு விசாக்களை வழங்குவதைத் தடுத்தது. அண்மையில்தான் சீனா அந்தத் தடையை அகற்றியது.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை மீண்டும் தொடர்ந்தது.
“சீனா, இந்தியாவுடன் நல்ல உறவுகளைக் கட்டிக்காக்கத் தயாராக இருக்கிறது,” என்று சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இம்மாதத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இரு நாடுகளும் எல்லை விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வர்த்தக உறவைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில்தான், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இன்று முதல் இந்தியா மீண்டும் விசாக்களை வழங்கவுள்ளது.