• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் மரணம்: நிதி சார்ந்த தகவல்கள், பரிந்துரைகளை யாரெல்லாம் வழங்கலாம்?

Byadmin

Oct 21, 2026


ஃபைனான்ஸ் வித் ஹரிஷ், முதலீடு

படக்குறிப்பு, ஹரிஷ்

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.)

இன்ஸ்டாகிராம் தளத்தில் நிதி சார்ந்த ஆலோசனை வழங்கி வந்த ஹரிஷ் என்கிற இன்ஃப்ளுயன்சர் உயிரிழந்த சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது. அவரின் தந்தை ‘ஜேசன் சாமுவேல் என்கிற யூடியூபர் தான் இதற்குக் காரணம்’ என காவல்துறைக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் நேற்று (அக்டோபர் 20) காலை ‘தற்கொலை மூலம் உயிரிழந்ததாக’ அவரின் தந்தை அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அதற்கு ஜேசன் சாமுவேல் என்பவர் இணையவழியில் கொடுத்த துன்புறுத்தல் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், நடந்த சம்பவத்தால் தான் ஆழ்ந்த துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளதாக எக்ஸ் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஹரிஷிடம் செபியின் சான்று தொடர்பான விஷயங்களை மட்டுமே எழுப்பியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

By admin