• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்: தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி – என்ன நடக்கிறது?

Byadmin

Jun 27, 2026


பாக்யராஜ், மறைவு, இயக்குநர் பாக்யராஜ்

பட மூலாதாரம், K Bhagyaraj

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், இயக்குநர்கள் நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர்.

சமீபத்தில் மறைந்த முதுபெரும் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் பாக்யராஜ். பாரதி ராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ்.

பாரதிராஜா இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு வசனமும், ‘ஒரு கைதியின் டைரி’ படத்துக்கு கதை, வசனமும் எழுதியவர் பாக்யராஜ் தான்.

By admin