2
இரவு நேரத்தில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ‘கனிவான, தாராள மனப்பான்மை கொண்ட, மிகவும் நேசிக்கப்பட்ட இளைஞனின்’ குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன், அவரைக் கொன்ற கொலையாளிக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
38 வயதான சலே பேயா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு இலண்டனில் உள்ள நியூஹாமில் தனது நண்பர்களுடன் ஒரு இரவு விடுதியில் இருந்தார்,
அப்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவைச் சேர்ந்த ஒருவருடன் இடம்பெற்ற சண்மையில் கத்தியால் குத்தப்பட்டார்.
அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.