• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது? அதிக உணவை எப்போது சாப்பிடலாம்? 5 முக்கிய விஷயங்கள்

Byadmin

Aug 16, 2026


உணவு, உடல்நலம், இரவு உணவு, ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் உடலின் உயிரியல் கடிகாரமும் உணவு எவ்வாறு செரிமானமாகிறது என்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

“காலை உணவை மன்னரைப் போலவும், மதிய உணவை இளவரசரைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்,” என்று வழக்கமான ஸ்பானிய உணவுப் பழக்கங்கள் குறித்து நான் கேட்டபோது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எனது நண்பரும் சக ஊழியருமான ஜேவியர் ஹிர்ஷ்ஃபெல்ட் என்னிடம் கூறினார். சிறு வயதிலிருந்தே இந்தப் பழமொழியை அவர் தொடர்ந்து கேட்டுவந்திருக்கிறார்.

ஸ்பெயினில், மதிய உணவுதான் அன்றைய நாளின் மிகப்பெரிய உணவாக இருப்பது வழக்கம். அதேவேளை, இரவு உணவு பொதுவாக லேசான உணவுகளாக இருக்கும். “சிலர் இரவு உணவை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார்கள். அல்லது ஒரு பழத்தையும் தயிரையும் சாப்பிடுவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில், லேசான மதிய உணவைத் தொடர்ந்து மாலையில் அதிக அளவிலான உணவைச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் நாம் இதை மாற்றிச் செய்துகொண்டிருக்கலாம், வளர்ந்து வரும் க்ரோனோநியூட்ரிஷன் (chrononutrition) எனப்படும் அறிவியல் துறை இதைத்தான் கூறுகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாகும் என இது தெரிவிக்கிறது.

உடல் பருமனைக் குறைப்பது முதல் இருதய நோய்களைத் தடுப்பது வரை, நமது உடலின் உயிரியல் கடிகாரம் அல்லது சர்க்காடியன் ரிதம், உணவை நாம் எவ்வாறு செரிக்கிறோம் என்பதிலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கான காரணம் என்ன, அதன் அடிப்படையில் உணவு நேரத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.

By admin